Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீதிமன்றத்தில் அக்ஷய் படத்தின் பஞ்சாயத்து


Sugapriya Prakash| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:52 IST)
அக்ஷய் குமார் நடித்த ஜாலி எல்எல்பி படம் இந்தியில் ஹிட்டானது. அந்தப் படத்தைதான் உதயநிதி நடிப்பில் மனிதன் என்ற பெயரில் தமிழில் எடுத்தனர்.

 
 
ஜாலி எல்எல்பியின் இரண்டாவது பாகம் தயாராகி சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. பிப்ரவரி 10 படம் வெளியாக வேண்டும். இந்நிலையில், சட்டத்துறையை இந்தப் படத்தில் கொச்சைப்படுத்தியிருப்பதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர் மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர, இரண்டு வழக்கறிஞர்கள் படத்தைப் பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
படம் வெளியாவதற்குள் அதன் விமர்சனத்தை வெளியிடுவதா என்று படத்தை தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ உச்சநீதிமன்றத்தை அணுக, வரும் வெள்ளிக்கிழமைக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
 
நீதிமன்றத்தை மையப்படுத்திய படம் வெளியாக நீதிமன்ற படி ஏற வேண்டியிருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :