1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2014 (09:50 IST)

பேங் பேங் - இந்திய சினிமாவில் இதுதான் டாப்

இந்திய திரைப்படம் ஒன்று இதுவரை 5000 திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியானதில்லை. அந்த எல்லைக்கோட்டை இன்று பேங் பேங் திரைப்படம் தகர்த்தது.
 
ஹிர்த்திக் ரோஷன், கத்ரினா கைப் நடித்துள்ள பேங் பேங் இன்று (அக்.2) திரைக்கு வந்துள்ளது. படத்தை தயாரித்து விநியோகித்திருக்கும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, பேங் பேங் உலகம் முழுவதும் 5100 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 4300 திரையரங்குகள், வெளிநாட்டில் 852 திரையரங்குகள்.
 
இந்த அதிக எண்ணிக்கை காரணமாக மூன்று தினங்களில் 100 கோடியையும், ஆறே தினங்களில் 200 கோடிகளையும் இப்படம் தாண்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.