செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2014 (10:53 IST)

ஆறு தினங்கள் 119 கோடிகள் - பேங் பேங் வசூல் நிலவரம்

ஹிர்த்திக் ரோஷன் நடித்த பேங் பேங் திரைப்படம் ஐந்து தினங்களில் 100 கோடியை கடந்துள்ளது. ஆறு தினங்களில் இதன் இந்திய வசூல் 119.8 கோடிகள்.
 
டாம் க்ரூஸ், கேமரூன் டயஸ் நடித்த ஹாலிவுட் படத்தின் தழுவலான பேங் பேங் இந்திய சினிமா சரித்திரத்திரத்தின் வசூல் சாதனையை மாற்றி அமைக்கும் என விமர்சகர்கள் நம்பினர்.

மாறாக இப்படம் ஐந்து தினங்களில் 100 கோடிகளை கடந்ததோடு, ஆறு தினங்களில் 119.8 கோடிகளை தன் வசமாக்கியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்புடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. உலக அளவில் ஆறு தினங்களில் இப்படம் 158.1 கோடிகளை வசூலித்துள்ளது.

5100 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படம் வசூலில் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைவான லாபத்தை மட்டுமே அறுவடை செய்துள்ளது. படம் இந்தியாவில் 200 கோடிகளை தாண்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.