1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (11:46 IST)

ஹாலிவுட்டில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்

இந்தி சினிமாவின் தனித்த குரல் அனுராக் காஷ்யபின் படங்கள். இறுக்கமான மனநிலைகள், சூழல்கள்தான் இவரது கதைக்களம். நோ ஸ்மோக்கிங் தொடங்கி அக்ளிவரை வித்தியாசமான கதைக்களங்களில் மட்டுமே சஞ்சரித்தவர்.
 
இந்த வருடம் டிசம்பரில் வெளியாவதாக இருந்த அவரது பாம்பே வெல்வெட் திரைப்படம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போயுள்ளது. எதிர்பார்த்ததைவிட ஸீஜி வேலைகள் நாள்களை எடுத்துக் கொண்டன.
 
இதையடுத்து ஹாலிவுட் படமொன்றை இயக்குகிறார். இதனை அனுராக் காஷ்யப் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், என்னுடைய அடுத்தப் படம் பெரிய புராஜெக்ட். நிறைய தயாரிப்புகள் அதற்கு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.
 
வழக்கம் போல டார்க் க்ரைம் த்ரில்லராக இது இருக்கும். ஹாலிவுட் நிறுவனம் ஒன்று படத்தை தயாரிக்கிறது.