வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: புதன், 28 ஜனவரி 2015 (10:30 IST)

அதை பெறுவதற்கான தகுதி எனக்கு இல்லை - அமிதாப்பின் தன்னடக்கம்

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் அரசு அமைத்த பிறகு நடப்பவை பலதும் கேலிக்கூத்தாக உள்ளன. பாரத ரத்னா விருதுகள் இந்த தேசத்துக்கு முறையான பங்களிப்பு செலுத்தியவர்களுக்கு தருவதற்குப் பதில் தங்களின் இந்துத்துவா கொள்கைக்கு அனுசரணையாக உள்ளவர்களுக்கே தந்தனர். இந்த இந்துத்துவா சார்புடனே அனைத்தும் அரங்கேறுகின்றன.
கடந்த 25 -ஆம் தேதி மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. 
 
அதனைத் தொடர்ந்து, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமிதாப் பாரத ரத்னா விருதுக்கு தகுதியுடையவர். அவரது தகுதிக்கும், திறமைக்கும் பத்மவிபூஷண் விருது ஏற்றதல்ல என்று கூறியிருந்தார்.
 
சில சூப்பர் ஸ்டார்களைப் போல இதுபோன்ற புகழுரைகளை மௌனமாக இருந்து அங்கீகரிக்காமல் உடனடியாக பதிலளித்துள்ளார் அமிதாப். ட்விட்டரில் இதுபற்றி கருத்து தெரிவித்தவர், மம்தா அவர்களே, அத்தகைய (பாரத ரத்னா விருது) அங்கீகாரம் பெறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நாடு எனக்கு தந்திருப்பது மிகவும் கௌரவமானது என அடக்கத்துடன் கருதுகிறேன் என கூறியுள்ளார்.