Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் என்ன புள்ள பெத்துக்கிற இயந்திரமா? ஆவேசமடைந்த நடிகை


Abimukatheesh| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (18:04 IST)
நான் பிள்ளை பெறும் இயந்திரம் இல்லை என பிரபல நடிகை வித்யா பாலன் கோபாமாக தெரிவித்துள்ளார்.

 

 
பாலிவுட் நடிகை வித்யாபாலன், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் வித்யா பாலன் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
 
இவர் திருமணத்திற்கு பின் எப்போழுது மருத்துவமனைக்கு சென்றாலும், கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவருவதும். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வருவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. 
 
இந்நிலையில் அண்மையில் இவர் மருத்துவமனைக்கு சென்றபோது அதேபோல் செய்தி வெளியாகியுள்ளது. இதைப்பார்த்து வித்யா பாலன் கடுமையான கோபத்துக்கு ஆளாகிவிட்டார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் மருத்துவமனைக்கு சென்றால் உடனே நான் கர்ப்பமா? இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். இதில் மூக்கை நுழைப்பது சரி அல்ல. ஏன் எப்பொழுது பார்த்தாலும் குழந்தை குழந்தை என்று கேட்கிறார்கள்? நான் ஒன்றும் குழந்தை பெறும் இயந்திரம் அல்ல, என தெரிவித்துள்ளார்.
 
மேலும் இதோபோல் ஒரு நேர்காணலில் எப்போது குழந்தை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு; ஏன் இந்த கேள்வியை நடிகர்களை பார்த்து யாரும் கேட்பதில்லை என இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :