வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2016 (15:15 IST)

மீண்டும் அக்ஷய் குமாரை இயக்கும் நீரஜ் பாண்டே

ஏ வெட்னெஸ்டே படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே அடுத்து ஸ்பெஷல் 26 படத்தை இயக்கினார். அக்ஷய் குமார் நடித்த இந்தப் படம் வெற்றி பெற்றது. அடுத்து அக்ஷய் குமார் நடிப்பில் பேபி. அதுவும் ஹிட்.


 

 
தொடர்ச்சியாக மூன்று ஹிட்கள் கொடுத்தவர் மீண்டும் அக்ஷய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ரஸ்டம் என்று படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு காதல் கதையையும் பேபி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கப் போவதாக நீரஜ் பாண்டே கூறியுள்ளார்.
 
நீரஜ் - அக்ஷய் இணையும் புதிய படத்தை நீரஜின் பிளான் சி நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.பேபி இரண்டாம் பாகத்திலும் அக்ஷயே நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.