1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Updated : புதன், 29 அக்டோபர் 2014 (19:09 IST)

ஐயோ... அது அஜய் தேவ்கனின் ஐடியா

பிரபுதேவாவின் புதிய இந்திப் படம் ஆக்ஷன் ஜாக்சனின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் இருவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் அதையெல்லாம் பிரபுதேவா கண்டு கொண்டதாக தெரியவில்லை. எப்படியும் கழுவி ஊற்றுகிறவர்கள்தான் முதல்நாள் முதல் ஷோ பார்க்கப் போகிறார்கள்.
 
ஆக்ஷன் ஜாக்சனின் ட்ரெய்லரில், பிரபுதேவாவைவிட நீ நல்லா டான்ஸ் ஆடுற என்று சோனாக்ஷி சின்கா அஜய் தேவ்கனிடம் சொல்லும் வசனம் வருகிறது. ட்ரெய்லரின் இறுதியில் அஜய் தேவ்கனுடன் பிரபுதேவாவும் நடந்து வருகிறார்.
அப்படியானால் படத்தில் பிரபுதேவாவும் நடித்திருக்கிறாரா?
 
ஐயோ... அது அஜய் தேவ்கனின் ஐடியா என்று மறுத்துள்ளார் பிரபுதேவா. ஹிர்த்திக் ரோஷன் அல்லது ஷாகித் கபூரின் பெயரைதான் படத்தில் பயன்படுத்துவதாக பிரபுதேவா இருந்தாராம். ஆனால் அஜய் தேவ்கன்தான், நீங்க இருக்கும் போது வேறு பெயர் எதுக்கு என்று சோனாக்ஷியின் டயலாக்கில் பிரபுதேவாவின் பெயரை சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் பிரபுதேவா படத்தில் தோன்றுவது பாடல் காட்சியில்தானாம்.
 
விரைவில் தொடங்கயிருக்கும் ஏபிசிடி இரண்டாம் பாகத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தத் தகவலையும் அவரே கூறினார். 
 
ஆக்ஷன் ஜாக்சன் டிசம்பர் 5 திரைக்கு வருகிறது.