வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: புதன், 10 டிசம்பர் 2014 (11:36 IST)

வீராட் கோலியின் காதலிக்கு புடவை பரிசளித்த அமீர் கான்

பிகே படத்தை புரமோட் செய்வதில் பிஸியாக இருக்கிறார் அமீர் கான். ஒரு படத்தை எப்படி புரமோட் செய்ய வேண்டும் என்பதை நடிகர்கள் இவரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பிகேயில் அமீருடன் நடித்திருப்பவர் அனுஷ்கா சர்மா. வீராட் கோலியின் காதலி. சமீபத்தில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக பனாரஸ் சென்ற அமீர் கான் அனுஷ்கா சர்மாவுக்காக தானே கடைக்கு நேரில் சென்று புடவை ஒன்றை வாங்கினார். 
 
சக நடிகை என்ற நட்பில் பரிசளிக்க இந்தப் புடவையை வாங்கினாராம்.
 
மதுரை பக்கமாக இருந்தால் தாய்மாமன் மட்டும்தான் பெண்ணுக்கு புடவை தரலாம் என்று அருவாளை தூக்கியிருப்பார்கள்.