ஹாலிவுட் படத்தை பாலிவுட்டுக்கு கொண்டு வரும் ஏ.ஆர். முருகதாஸ்!!

Last Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (18:54 IST)
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் மில்லியன் டாலர் பேபி.

2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யவிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படம் 30 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால், 216.8 மில்லியன் டாலர்களை வசூலித்தது.


மேலும், சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ஈஸ்ட்வுட்), சிறந்த நடிகை (ஹிலாரி ஸ்வாங்), சிறந்த உறுதுணை நடிகர் (மார்கன் ஃப்ரீமேன்) ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது.

இந்த படம் தற்போது பாலிவுட்டில் தயாராகிறது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அக்‌ஷய் குமார் க்ளிண்ட் ஈஸ்வுட் நடித்த பாத்திரத்திலும், மரினா குவார் என்ற நடிகை ஹிலாரி ஸ்வாங் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :