பிரபல பாலிவுட் நடிகரின் திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தம்

marr
Last Modified சனி, 7 ஜூலை 2018 (12:38 IST)
பிரபல நடிகர் மஹா அக்‌ஷயின் திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் பிரபல நடிகரான மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடித்து வருகிறார். 
 
மும்பையை சேர்ந்த போஜ்பூரி நடிகை ஒருவர்  மஹா அக்‌ஷய் தன்னை திருமணம் செய்வதாக கூறி 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார் என குற்றம் சாட்டினார். மேலும் அக்‌ஷயின் தாய் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
mithun
இந்நிலையில் உதகையில் அவர்களுக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் அக்‌ஷய்க்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனையறிந்த அந்த நடிகை டெல்லி போலிஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அக்‌ஷயின் திருமணம் அதிரடியாக நிறுத்தப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :