Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மும்தாஜின் ஆவி உலவும் மண்!

Widgets Magazine

முகலாய மன்னர் ஷாஜஹான் மற்றும் பேகம் மும்தாஜின் காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் பற்றி எல்லோரும் அறிவார்கள்.

மும்தாஜின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பு வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் தான் இருந்தது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

மேலும், இந்த புலாரா மஹாலில் தான் மும்தாஜின் ஆவி உலவுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் புலாராவில் முகாலயப் பேரரசியான பேகம் மும்தாஜ் மரணமடைந்த போது, மும்தாஜின் நினைவாக ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று ஷாஜஹான் ஆசைப்பட்டார்.

அப்போதுதான் தாஜ்மஹால் கட்டுவது என்ற எண்ணம் ஷாஜகானின் எண்ணத்தில் உதித்தது. மேலும், தாஜ்மஹாலை புர்ஹாம்புரில் கட்டுவது என்றே திட்டமிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களால் தாஜ்மஹால் ஆக்ராவில் கட்டப்பட்டது.

அதுவரை மும்தாஜின் உடல் புலாரா மஹாலில்தான் வைக்கப்பட்டிருந்தது. தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டதும், மும்தாஜின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டது.

மும்தாஜின் உடல் மட்டுமே புலாரா மஹாலில் இருந்து தாஜ்மஹாலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் மும்தாஜின் ஆவி இன்னமும் புலாரா மஹாலில் தான் உலாவிக் கொண்டிருக்கிறது என்று அங்கு வாழும் மக்கள் கருதுகின்றனர்.

webdunia photoFILE
புலாரா மாளிகையில் இருந்து அவ்வப்போது சத்தங்களும், கத்துவது போன்றும், அலறுவது போன்றும் சத்தங்கள் வருவதாகவும், ஆனால் அந்த ஆவி இதுவரை யாரையும் துன்புறுத்தியது இல்லை என்றும் அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.

அதாவது, கடந்த 1631ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மும்தாஜ் மரணமடைந்துவிட்டார். அதனால்தான் அந்த இடத்திலேயே அவரது ஆவி இன்னமும் அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

புர்ஹாம்புரில் உள்ள புலாரா மாளிகையில் மும்தாஜின் ஆவி உலாவுவதாகக் கூறப்படுவது உண்மையா அல்லது அந்த மாளிகைக்குள் கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் சில விஷமிகள், தங்களது வசதிக்காக பொதுமக்கள் வரக் கூடாது என்பதற்காக செய்து வரும் புரளியா?

இந்த கதையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இதுபோன்ற விசித்திரமான விஷயங்களைப் பற்றி நீங்கள் எங்கேனும் கேள்விப்பட்டுள்ளீர்களா? இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

மது அருந்தும் மா காவால்கா

இதுவரை பைரவருக்கு மதுவை நைவேத்தியமாகப் படைப்பதைப் பார்த்துள்ளோம். ஆனால் இந்த வார ...

அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள்

இதுவரை எத்தனையோ வித்தியாசமான விஷயங்களை இந்த நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களுக்கு ...

மஞ்சள் காமாலைக்கு ஒரே தீர்வு!

இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் மஞ்சள் காமாலையைப் போக்குவதற்காக இரு‌க்கு‌ம் ஒரு ...

ராவணனை வழிபடும் கிராமம்!

இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களை உஜ்ஜைனில் உள்ள சிக்காலி கிராமத்திற்கு ...

Widgets Magazine Widgets Magazine