வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (10:42 IST)

ஜப்பானியப் போர் வன்முறை குறித்து ஷின்ஷோ அபே வருத்தம்

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானிய வன்முறை ஆக்ரமிப்பு குறித்து ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
 


அமெரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஷின்ஷோ அபே பேசுகையில், தனது நாடு செய்ததைப் பற்றி கண்டும் காணாமல் அது இருக்க முடியாது என்றார்.
 
போரின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த ஆண்டில், அபேயின் கருத்துக்கள் கவனமாகக் கேட்கப்பட்டன.
 
ஆனால், அவர் இந்தப் போரின்போது கொல்லப்பட்ட அமெரிக்கர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்த போதும், ஜப்பான் ஆசிய மக்களுக்கு வலியைத் தந்தது என்று ஒப்புக்கொண்டபோதும் அவருக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது.
 
எதிர்காலத்தில் அமைதி மற்றும் சுபிட்சத்தை கொண்டுவர தான் எல்லா முயற்சிகளையும் எடுப்பேன் என்று அவர் கூறினார்.
 
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜப்பானியப் பிரதமர் ஒருவர் பேசுவது இதுவே முதன்முறை.