வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 3 ஏப்ரல் 2014 (13:01 IST)

இலங்கை தென் மற்றும் மேல் மாகாண வாக்களிப்புகள் சுமூகமாக முடிந்தன'

இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள்

இந்த தேர்தல் மூலம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாண சபைக்கு 102 உறுப்பினர்களும் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்திற்கு 53 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்யப்படவுள்ளனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி உட்பட 25 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக்குழுக்கள் சார்பாக மொத்தம் 3194 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

தேர்தல் நடைபெறும் இரு மாகாணங்களிலும் தேர்தல் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.இருந்த போதிலும் சிறுபான்மை இனக் கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.குறிப்பாக அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான தேசிய சுதந்திர முன்னனி மற்றும் ஹெல உறுமய போன்றன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இணைந்து போட்டியிடுகின்றன.

நள்ளிரவுக்கு பின்னர் தேர்தல் முடிவுகள் வெளி வரத் தொடங்கும் என எதிர்பார்கப்படுகின்றது.