செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 5 மே 2014 (16:06 IST)

இள ரத்தம் பாய்ச்சி மூப்பின் பாதிப்புகளை குறைக்க முடியும்

மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
 
அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்தவர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
 
சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி விஸ் கோரே, நேச்சர் மெடிசின் என்ற சஞ்சிகையில் எழுதியுள்ளார்.
 
ஆனால் டிமென்ஷியா, அல்செய்மர்ஸ் போன்ற மூளை பாதிப்பு நோய்கள் மூப்படைவதால் மட்டும்தான் வருகின்றன என்று கூறுவதற்கில்லை என்று அந்நோய்கள் சம்பந்தமாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் சேவை ஆற்றிவரும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.