1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (20:51 IST)

யேமன் பிரதமர் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் உயிர்தப்பினார்

யேமன் தென்துறைமுக நகரான ஏடனிலுள்ள ஹோட்டல் ஒன்று மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு தங்கியிருந்த அந்நாட்டு பிரதமர் கலேத் பஹா உயிர்தப்பியுள்ளார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 
 
இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டர்களில் யேமனுக்கு உதவும் சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகளின் 15 படையினரும் அடங்குவர் என்று செய்திகள் கூறுகின்றன.
இத்தாக்குதல் தொடர்பில் ஷியா இனப்பிரிவைச் சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு யேமன் அரசாங்கத்திற்கு உதவி வரும் வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த படையினர் தங்கியிருந்த குடியிருப்பின் மீது மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்றாவது தாக்குதல் இலக்கொன்று தவறியுள்ளது.