வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (20:21 IST)

மோசமாக வரையப்பட்ட இயேசு ஓவியத்தால் பிரபலமடைந்த ஸ்பெயின் நகரம்

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரம் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.


 

அந்த நகரத்தை சேர்ந்த ஒரு வயதான நபர் இயேசுவின் சுவரோவியத்தை மோசமாக மறுசீரமைப்பு செய்த நிகழ்வை பற்றி ஒரு இசை நாடகம் தயாரிக்கபட்டுள்ளது.

போஹா நகரத்தில், சிசிலியா கிமென்ஸின் முயற்சிகள், 2012-ல் இயேசுவின் ஓவியத்தை மிக மோசமாக சிதைத்துவிட்டது. இயேசுவை பார்ப்பதற்கு ஒரு குரங்கு போல அவர் மாற்றிவிட்டார் என்று பலர் புகார் கூறியுள்ளனர்.

85 வயதான சிசிலியா கிமென்ஸ் பேசுகையில், அவர் வரையும் போது ஒரு நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வார்தைகள் இசை நாடகத்தில் இடம் பிடித்திருக்கிறது.

அவரின் முயற்சிகள் கடுமையான விமர்சனங்களை கொண்டுவந்த அதே நேரத்தில், போஹா நகரத்திற்கு ஒரு நல்ல வணிக வாய்ப்பையும் கொண்டுவந்துள்ளது. இந்த நகரத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் பயணிகளை ஈர்த்துள்ளது.