வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜூலை 2019 (14:28 IST)

தோனியின் ஓய்வு குறித்து என்ன சொல்கிறார் அவரது பள்ளிக்கால பயிற்சியாளர்

இந்திய அணி நன்றாக விளையாடவில்லை என்றால் அதற்கு காரணம் தோனி என்று கூறிவிடுகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் தோனி அவரது அணியை தொடர்ந்து நான்கு முறை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.

 
அவரின் தலைமையில்தான் இந்திய அணி டி20 சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது, உலகக் கோப்பையை வென்றது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தது. இதற்கு மேல் என்ன வேண்டும்?
 
இந்திய அணி உலகக் கோப்பை போட்டியை விளையாடி வருகிறது. ஏதோ ஒரு கிளப்புகளுக்கு இடையேயான போட்டியில் இல்லை. எனவே அதற்கேற்றாற் போல் பொறுப்பு வேண்டும். நாட்டின் மீது பற்று வேண்டும் அது அணி முழுவதும் வெளிப்பட வேண்டும்.
 
ஏன் தோனி மட்டுமே அந்த பொறுப்பை ஏற்க வேண்டும். இந்த விஷயத்தை எழுப்பியவரை பாருங்கள். அவரும் இந்திய அணிக்காக விளையாடியவர்தான். தற்போது வர்ணனையாளராக உள்ளார். தோனியை பற்றி கேள்வி எழுப்புவதற்கு முன் தன்னைப் பற்றி அவர் யோசிக்க வேண்டும்.
 
தோனி இதுவரை 350 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் தோனி குறித்து பேசிய அந்த வர்ணனையாளர் வெறும் 75 போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே தோனி குறித்து அவர் எந்த ஒரு கருத்தை கூறுவதற்கு முன்பும் சற்று யோசிக்க வேண்டும்.
 
ஓய்வு பெறுவது குறித்து பல கேள்விகள் தோனியை நோக்கி எழுப்பப்படுகின்றன. ஆனால் ஓய்வு பெறுவது எப்போது என்பதை தோனியால் மட்டுமே முடிவு செய்ய முடியும். அவரின் மனைவி அல்லது பெற்றோர்கூட முடியாது.
 
அவர் ஓய்வு பெற வேண்டும் என நினைத்தால் அதனை அவரே செய்வார். அதை அவர் அமைதியாக செய்வார். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் ஒருநாள் அவர் அனைத்து விதமான போட்டிகளிலும் ஓய்வுப் பெறுவதாக திடீரென அறிவிப்பார்.
 
உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன் இந்திய அணி செய்ய வேண்டியது என்ன? 'மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' சஞ்சய் மஞ்சரேக்கர் மீது ஜடேஜா விமர்சனம் அனைத்து கிரிக்கெட் வீரருக்கும் கடினமான காலம் ஒன்று உள்ளது. சச்சினுக்குகூட இந்த காலம் வந்துள்ளது. 95 ரன்கள் வரை எடுத்த பிறகு ஐந்து ரன்களை எடுக்க அவர் இருபது பந்துகளை எதிர்கொள்வார்.
 
தோனியின் இந்த தருணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது சரி என்று எனக்கு தோன்றவில்லை. அவரை நாம் ஊக்குவிக்க வேண்டும் அல்லது இந்த தருணத்தில் இருந்து வெளிவர அவருக்கு உதவி செய்ய வேண்டும்.
 
ஒரு கிரிக்கெட் வீரரை தொடர்ந்து விமர்சித்து வந்தால் அவர் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட வேண்டிய சூழல் இது என நினைக்கக் கூடும்.
 
இந்த உலகக் கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால் இங்கிலாந்துக்கு எதிரான தோனியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறலாம். ஆனால் இந்திய அணி தோல்வியுற்றதுக்கு தோனி பலியாடாக ஆக்கப்பட்டார். அவர் இளைஞர் இல்லை என்பதால் அவரை அணியில் இருந்து எளிதாக தூக்கி விடலாம் என்று நினைத்துவிட்டனர்.
 
இது நமது குடும்பத்தில் உள்ள சூழலை போன்றுதான். நமது பெற்றோருக்கு வயதாகியவுடன் அவர்களை நாம் உதாசினப்படுத்த தொடங்கிவிடுகிறோம். அவர்களுக்கு வயதானது குறையல்ல. நாம் அவர்களை பாரமாக நினைத்து விடுகிறோம்.
 
இந்திய அணியிலும் அந்த சூழலே நிலவுகிறது என நான் நினைக்கிறேன். தோனிக்கு வயதாகிவிட்டது என அனைவரும் அவரை விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
 
ஆனால் வயதானாலும் தோனி திடமான உடல்நலத்துடன்தான் உள்ளார். அணியில் உள்ள 22-23 வயதுடைய இளைஞர்களும் கூட தோனியை போன்று திடமான உடல்நலம் கொண்டவர்கள் இல்லை என்று நான் கூறுவேன்.
 
தொடக்கத்திலேயே தோனிக்கு நல்ல ஒரு எதிர்காலம் உள்ளது என எனக்கு புரிந்துவிட்டது. அந்த சமயத்தில் அவர் தொழில்முறை கிரிக்கெட் வீரராக வேண்டும் என உறுதி கொண்டிருந்தார். பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க விருப்பப்படுவதாக தோனி என்னிடம் தெரிவித்தார். இது அவர் குறித்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலும் காட்டப்பட்டிருக்கும்.


 
விராட் கோலியின் இப்படை உலகக் கோப்பையை வெல்லுமா?
‘தல’ தோனியும், இறுதி ஓவர்களும் - என்றும் மாறாத காதல் கதை
"சார் நான் தொடக்க ஆட்டக்காராக களம் இறங்க விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். "நீ தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் மொத்த அணியின் ஆட்டமும் உன்னை சார்ந்தே இருக்கும். நீ நன்றாக விளையாட வில்லை என்றால் அணி பெரும் நெருக்கடிக்குள்ளாகும்," என்று நான் கூறினேன்.
 
அதற்கு தோனி, "ஒன்றும் தவறாக போகாது. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்," என்றார். எனவே "நீ உறுதியாக கூறினால் தொடக்க ஆட்டக்காராக களம் இறக்க நானும் உனக்கு உறுதியளிக்கிறேன்," என்றேன் நான்.
 
நான் தோனியிடம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். யார் என்ன சொன்னாலும் அதை மறந்துவிடு. நீ உனது விளையாட்டை நன்றாக விளையாடு. இது உனக்கு நான்காவது உலகக் கோப்பை. நீ என்ன முடிவு எடுக்க விரும்பினாலும் சரி அதை இந்த உலகக் கோப்பையை வென்றபின் எடு அவ்வளவுதான்.