வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 6 மே 2014 (07:30 IST)

பாதிரிமாரின் சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திகானத்தின் பொறுப்பு எல்லை குறைக்கப்பட வேண்டும்

பாதிரிமார் செய்த சிறார் பாலியல் துஷ்பிரயோகங்களைக் கையாளும் விவகாரத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான வத்திகானம் உலக அளவில் பொறுப்புகூற வேண்டும் என்ற நிலை மாற வேண்டும் என வத்திகானத் தூதர் தெரிவித்துள்ளார்.

சித்ரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்தை விதங்களை ஒழிப்பது சம்பந்தமாக ஐநா ஒப்பந்தத்தில் வத்திகானம் கையொப்பமிட்டிருந்தாலும், பாதிரிமாரின் சிறார் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு வத்திகானத்தால் உலக அளவில் பொறுப்பேற்றிட முடியாது என ஜெனீவாவில் அவ்விவகாரத்தை விசாரித்துவரும் ஐநா குழுவிடம் வத்திகான தூதர் தெரிவித்துள்ளார்.
 
சித்ரவதைக்கு எதிரான ஐநாவின் ஒப்பந்தத்தை வத்திகானம் மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அது பற்றி விசாரணை செய்யும் கண்காணிப்புக் குழுவின் முன்னர் வத்திகான தூதராக பேராயர் சில்வானோ டொமாஸ்ஸி தோன்றியிருந்தார்.
 
சித்ரவதைக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தில் 2002ஆம் ஆண்டு போப்பாண்டவர் கையொப்பமிட்டபோது, வத்திகான நகர எல்லைக்குள்ளாக நடக்கும் விஷயங்களுக்கு பொறுப்பேற்பதை மட்டுமே அவர் கருதியிருந்தார் என பேராயர் வாதிட்டுள்ளார்.
 
தனி நிர்வாகம் கொண்டிருந்தாலும், ஆயிரம் பேருக்கும் குறைவான குடிமக்களே வாழும் ஒரு சிறிய இடம் வத்திகானம். அது ரோம் நகர மையத்தில் உள்ளது.
 
கத்தோலிக்கத் திருச்சபையின் அனைத்து உறுப்பினரையும் பிரிவையும் உள்ளடக்கும் விதமான அதிகார வரம்பு போப்பாண்டவருக்கு இல்லை என வத்திகானத் தூதர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் உலக அளவில் கத்தோலிக்க பாதிரிமார் ஈடுபட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகங்களை கத்தோலிக்கத் திருச்சபை கையாண்டிருந்த விதம் தொடர்பில் அதன் மீது தெரிவிக்கப்படும் விமர்சனங்களை திசைதிருப்புவதற்காக வத்திகானம் தற்போது இதுபோல அளவுக்கதிகமாக சட்ட நுணுக்கம் பேசும் வாதங்களை முன்வைக்கிறது எனக் கூறி ஐநா நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடக்கவுள்ள ஒரு விசாரணையில் வத்திகானத்தின் தூதர் ஐநா நிபுணர்களின் கேள்விகளுக்கும் வாதங்களுக்கு பதில் தெரிவிக்கவுள்ளார்.
 
சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பாதிரிமார்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க கத்தோலிக்கத் திருச்சபைத் தலைமைப் பீடம் துணைபோகிறது என சிறார் உரிமைக்கான ஐநா குழு கடந்த ஜனவரியில் குற்றம்சாட்டின் விசாரணைகள் செய்ய தீர்மானித்திருந்தது.