செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (17:35 IST)

தப்பிச்சென்ற கைதி ரிச்சர்ட் மெட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் சிறையொன்றிலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில் மூன்றுவாரங்களாக பிடிபடாது இருந்த கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உச்சகட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் மிக்க சிறையொன்றை துளையிடும் கருவிகளின் உதவியுடன் உடைத்துக் கொண்டு இந்தக் கொலைக் குற்றவாளிக் கைதி தப்பிச் சென்றிருந்தார்.

ரிச்சர்ட் மெட் என்ற அந்தக் கைதி நியுயோர்க் மாநிலத்தில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சரணடைய மறுத்ததாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

அவருடன் தப்பிச் சென்றிருந்த இன்னொரு கொலைக்குற்றவாளிக் கைதியான டேவிட் ஸ்வெட் தொடர்ந்தும் தேடப்பட்டுவருகின்றார்.