வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2014 (17:08 IST)

திரிப்போலி விமான நிலையத்தை ஆயுதக் குழுக்கள் கைப்பற்றினர்

திரிப்போலி சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியுள்ள இஸ்லாமிய ஆயுததாரிகளையும் மிஸ்ராட்டாவைச் சேர்ந்த அவர்களின் கூட்டாளி அணிகளையும் லிபியாவின் புதிய நாடாளுமன்றம் கண்டித்துள்ளது.

அவர்களை ஒரு பயங்கரவாதக் கூட்டணி என்றும் நியாயப்படி அவர்கள் இலக்குவைக்கப்பட வேண்டியவர்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், இந்த நாடாளுமன்றம் சட்டபூர்வமானது அல்ல என்றும் இஸ்லாமியவாதிகள் பெருவாரியாக ஆதிக்கம் செலுத்தும் பொதுத் தேசியக் கவுன்சிலை மீளவும் கொண்டுவர வேண்டும் என்றும் கூட்டணியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

திரிப்போலி விமான நிலையத்துக்கு அருகே உள்ள கூட்டணியின் நிலைகள் மீது வௌ்ளிக்கிழமை விமானத்தாக்குதல் நடத்தியிருந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எகிப்து முழுமையாக மறுத்துள்ளது.

மிஸ்ராட்டா படையணிக்கும், தலைநகருக்கு மேற்காகவுள்ள ஸின்டான் பிராந்தியத்தைச் சேர்ந்த இஸ்லாமிய-எதிர்ப்பு அணிக்கும் இடையே நடக்கும் ஆயுதக் குழு மோதல்களை நிறுத்துவதற்கு வெளிநாட்டு தலையீட்டை வரவழைப்பதற்காக 11 நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றம் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.