செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (11:46 IST)

தாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு

தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது செய்தித்  தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
தீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடாக இது அமைந்துவிட கூடாது என்பதற்காக இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
"இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கூட்டங்களுக்கு தேவையான பணத்தை அளிப்பதற்கு அனுமதி கோரினோம்," என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் ஒப்புக்கொண்டுள்ளது.
 
அமெரிக்க அரசாங்கம் தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்கு வழிவகுக்கும் நோக்கில், அக்டோபர் 2018 முதல் இதுவரை, கத்தார் தலைநகர் தோகாவில் தாலிபன்களுடன் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.