வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Abimukatheesh

கர்நாடகாவில் பசுமாடுகளை கொண்டு சென்றவர் அடித்துக் கொலை

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், பசு மாடுகளை வெளிப்படையாக வண்டியில் கொண்டு சென்றதற்காக இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, போலிசார் 17 பேரைக் கைது செய்துள்ளனர்.


 

இந்து மதத்தின் ஆதரவு கட்சியான பாரதீய ஜனதா கட்சியுடன் இணைந்து பணியாற்றிய பிரவீன் பூஜாரி என்பவர், பசு கன்றுகளை வண்டியில் கொண்டு சென்றபோது கொல்லப்பட்டார்.

பசுக்களை புனிதமாக கருதும் வலது சாரி இந்துக்கள், பசுக்களை காப்பது தங்கள் கடமை எனக் கருதுகின்றனர். அப்படிப்பட்டவர்களில் சிலர்,பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல பேரை அடித்துக் கொன்றனர். அந்தப் பட்டியலில் கர்நாடக சம்பவமும் சேர்ந்துள்ளது.

முன்னர் இந்த மாதம், இதுபோன்ற தாக்குதல்களை விமர்சித்துப் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மற்ற மாநிலங்களும் இதனைத் தடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.