வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (16:09 IST)

துருக்கி வரும் சிரியாவின் குர்த் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் படையெடுத்து முன்னேறிவருவதை அடுத்து அங்கிருந்து தப்பித்து எல்லை தாண்டி துருக்கிக்குள் நுழையும் சிரியாவின் குர்த் இன மக்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை தாண்டியுள்ளது என துருக்கி அரசு கூறுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து ஒரு சிறிய காலப்பகுதியில் அங்கிருந்து மக்கள் வெளியேறியதில் மிக அதிக எண்ணிக்கை இதுதான் என ஐநா கூறுகிறது.
 
கூடுதலாக லட்சக்கணக்கான அகதிகள் வரக்கூடிய மேலும் மோசமான ஒரு சூழலுக்கு ஆயத்தமாகி வருகிறது என அந்நாட்டின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 
சிரியாவிலிருந்து வந்த அகதிகள் பத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அடைக்கலம் தந்து துருக்கி ஏற்கனவே திணறிக்கொண்டுள்ள்து. சிரியாவுடனான தனது எல்லையை அது மூடிவிட்டது.
 
துருக்கியுடனான சிரியாவின் எல்லையில் உள்ள கோபானி என்ற ஊரிலிருந்து பத்து பதினைந்து கிலோமீட்டர் நெருக்கத்துக்கு இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் வந்துவிட்டதாகவும், இந்த ஊரை அவர்கள் பிடித்தால், அப்பகுதியின் முழுக் கட்டுப்பாடும் அவர்கள் கைகளுக்குப் போய்விடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.