வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 25 மே 2015 (16:10 IST)

ஸ்பெயின் உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சி பின்னடைவு

ஸ்பெயினில் ஞாயிறு நடந்த பிராந்திய மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அந்நாட்டின் பாரம்பரிய அரசியல்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சமிக்ஞை என்று சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பொதேமொஸ் இயக்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
நவம்பரில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கான ஒத்திகையாக இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் பார்க்கப்பட்டன. இந்தத் தேர்தல்களில் பொதேமோஸ் கட்சியும், சிக்கன நடவடிக்கையை எதிர்க்கும் இன்னொரு கட்சியான கியுவதானோஸ் கட்சியும் பெருமளவு வாக்குகளைக் குவித்துள்ளன.
 
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிராகரிக்கும் வகையில் மக்கள் வாக்களித்துள்ளதால் ஆளும் மக்கள் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மக்கள் கட்சி, தலைநகர் மட்ரிட் உள்ளிட்ட அதன் செல்வாக்கு மிகுந்த பல பிரதேசங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. பார்சிலோனாவில் இடதுசாரி கூட்டணியொன்று ஆட்சிக்கு வந்துள்ளது.