வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2015 (19:32 IST)

மோடிக்கு எதிராக சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உரை நிகழ்த்தியபோது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐ.நாவுக்கு வெளியில் 200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
 

 
நீதிக்கான சீக்கியர்கள் என தம்மை அழைத்துக் கொண்ட அந்தக் குழுவினர் மோடியின் தேசியவாத அரசாங்கம் மதச் சிறுபான்மையினர் மீது பெரும் வன்முறையை ஏவி விடுவதாக குற்றம்சாட்டினர்.
 
சீக்கியர்களுக்கான தனி நாடு குறித்து, பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.
 
சிலிக்கன் வேலியில் உள்ள ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள மோடியின் பொது கூட்டத்தைப் புறக்கணிக்குமாறு அந்தக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஆனால், பிரதமர் நரேந்திர மோதிக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டுமென அந்தப் பகுதியில் இருக்கும் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் இந்தியப் பாராம்பரியத்திலிருந்து வந்தவர்கள்.