1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 21 மே 2015 (18:12 IST)

கர்ப்பிணிகளில் பரசிட்டமோல் ஏற்படுத்தும் தாக்கம்

கர்ப்பகாலத்தில் தாய்மார் அதிகமான பரசிட்டமோலை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வலி நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பரசிட்டமோல் எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகளே இதனை தெரிவித்துள்ளனர்.
எலிகளில் மனிதக் கருவின் திசுக்களை செலுத்தி, ஒரு கர்ப்பம் போன்று பாவனை செய்து பரிசோதித்தபோது, பரசிட்டமோல் 7 நாட்களுக்கு கொடுக்கப்பட்டவற்றுக்கு, அதில் டெஸ்ட்துரோனின் அளவு மிகவும் குறைவாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
 
ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புக்களை உருவாக்குவதில் இந்த ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.
 
கர்ப்பிணிகள் இந்த வலி நிவாரணியை மிகவும் அவசியமாக தேவைப்பட்டால் மாத்திரம், மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்று பிரிட்டனின் சுகாதாரத்துறை கூறுகிறது.