வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2014 (17:05 IST)

பனிச்சரிவில் இறந்த ஷெர்பாக்களின் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு அதிகரிக்கப்பட வேண்டும்

நேபாளத்தில் எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கூடுதலான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என மலையேறுவோருக்கு வழிகாட்டிகளாக இருந்துவருகின்ற ஷெர்பாக்கள் கோருகின்றனர்.

இச்சம்பவத்தில் ஷெர்பாக்கள் 13 பேர் உயிரிழந்தனர் இன்னும் 3 ஷெர்பாக்களின் கதி பற்றி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
 
உயிரிழந்த ஷெர்பாக்களின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் நானூறு டாலர்களை மட்டுமே நஷ்டஈடாக அறிவித்திருப்பது போதாது என எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் உள்ள முகாமிலிருந்து ஷெர்பாக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.
 
வெளிநாட்டு மலையேற்ற ஆர்வலர்களுக்காக பாதை ஒன்றை வழிகாட்டிகள் தயாரித்துக்கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டது.
 
எவரெஸ்டில் மலையேற்றம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அதிக உயிர்களைப் பலிகொண்ட பனிச்சரிவு என்றால் அது இதுதான்.
 
உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலையேறும் பயணங்கள் சில ரத்துசெய்யப்பட்டுள்ளன.