வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 29 மே 2015 (08:55 IST)

பிரிட்டிஷ் மெத்தடிஸ்ட் திருச்சபையில் பாலியல் துஷ்பிரயோகங்கள்

பிரிட்டனின் மெத்தடிஸ்ட் திருச்சபையில் ஏராளமான பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளது சுயாதீன விசாரணை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
 


அந்தத் திருச்சபையைச் சேர்ந்த சுமார் 2000 பிரசாரகர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர் உடலியல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருந்தனர் என அந்த சுயாதீன விசாரணை அறிக்கை கூறுகிறது.
 
கடந்த அறுபது ஆண்டுகளில் நடைபெற்றதாக எழுந்த இந்தக் குற்றச்சாட்டுகள், காவல்துறையினர் ஆறு விசாரணைகளை முன்னெடுக்க வழி செய்தது.
 
பாதிக்கப்பட்டவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுள்ள பிரிட்டனின் மெத்தடிஸ்ட் திருச்சபை, அவர்களின் குற்றச்சாட்டுக்களை தாங்கள் புறந்தள்ளியதையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
 
மெத்தடிஸ்ட்டுகளால் நிறுவப்பட்ட ஒரு பாடசாலையில் தான் மாணவராக இருந்தபோது நடைபெற்ற துஷ்பிரயோகத்திலிருந்து இன்னும் தன்னால் மீள முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
தனக்கு மீண்டும் மீண்டும் பழைய நினைவுகள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.