வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (15:38 IST)

ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது

ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கான கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை நடந்து வருகிறது. நீண்ட வரிசைகளில் மக்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகிறார்கள்.
கடந்த சுமார் 300 ஆண்டுகளாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்காட்லாந்து பிரிந்து போகவேண்டுமா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு குறித்த அரசியல் விவாதம் கடந்த இரு ஆண்டுகளாக ஸ்காட்லாந்தில் தீவிரமாக நடந்தது.
 
இந்த விவாதம் ஸ்காட்லாந்து மக்களை இரு வேறு தரப்புகளாக பிரித்து, குடும்பங்களிலும், நண்பர்களிடையேயும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளைத் தூண்டியது.
 
தேர்தலில் வாக்களிக்க ஸ்காட்லாந்தின் வாக்களார்களில் 97 சதவீதத்தினர் பதிவு செய்திருக்கும் நிலையில், ஸ்காட்லாந்தின் தேர்தல் வரலாற்றிலேயே இந்த நாள் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
 
பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றிலேயெ முதல் முறையாக, 16 லிருந்து 17 வயதானவர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.