Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எலியின் தலைக்கு விலை : இது பாகிஸ்தானில்


Murugan| Last Updated: வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (17:58 IST)
பெஷாவர் நகரில் கடுமையாக எலிகள் பெருகியுள்ளதன் வெளிப்பாடாக, இந்த அறிவிப்பு வந்துள்ளது.

 

 
அங்குள்ள எலிகள் உணவு, உடை- ஏன், வீடுகளைக்கூட அரித்து சாப்பிடுகின்றன.
 
எலி கடித்ததால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பெஷாவரில் பிடிக்கப்படும் ஒவ்வொரு எலிக்கும் அரை டாலருக்கு சமமான சன்மானம் வழங்கப்படும் என உள்ளூராட்சி சபை தெரிவித்துள்ளது.
 
ஆனால் இராணுவப் பகுதிகளில் அது மூன்று டாலராக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எலிகள் கிட்டத்தட்ட பூனையின் அளவுக்கு இருப்பதனால், பூனைகள் அவற்றை துரத்திப் பிடிக்க அஞ்சுவதாக பெஷாவரிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :