1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (02:46 IST)

ஐரோப்பிய நிறுவனங்கள் குறித்து போப் விமர்சனம்

ஐரோப்பிய நிறுவனங்களை போப் பிரான்ஸிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஸ்ட்ராஸ்பர்கிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே போப் இந்நிறுவனங்களை கடுமையாக சாடினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை தங்களிடமிருந்து விலகித் தனியாக நிற்கும் ஒரு அமைப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள் என்றும், மக்கள் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் அது சட்டங்களை இயற்றியுள்ள குற்றங்களுக்கு ஆளாகியுள்ளது என்றும் போப் தமது உரையில் கூறினார்.
 
அப்படியான நிலைப்பாடு மக்களுக்கு ஊறு ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையின்மை மேலும் அதிகரித்துள்ளது என்றும் போப் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
 
நீடித்திருக்கக் கூடிய வகையில் இல்லாமல், சமூகத்தின் சில உறுப்பினர்கள் சுயநலத்துடன் கூடிய ஆடம்பரமான, டாம்பீகமான வாழ்க்கையை வாழ்க்கிறார்கள் என்றும் போப் குறைகூறியுள்ளார்.
 
வட ஆப்ரிக்காவிலிருந்து படகு மூலம் ஐரோப்பா வந்து குடியேற வேண்டும் எனும் நோக்கில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்தியத் தரைக்கடல் ஒரு பெரும் உயிர்க்கொல்லியாகத் திகழ்கிறது எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தார்.