1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (05:49 IST)

கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகக் கட்டமைப்பு மீது போப் கடும் தாக்குதல்

கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகக் கட்டமைப்பை, போப் பிரான்சிஸ் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.

திருச்சபையின் உயர்மட்டத்திலுள்ள கார்டினல்கள், ஆயர்கள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோரிடையே தனது கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்தும்போதே போப் இவ்வாறு சாடினார்.
 
கத்தோலிக்க நிர்வாகக் கட்டமைப்பினர் இடையே இருக்கும் அதிகார மமதை, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் குணம், தாங்கள் வல்லவர்கள் என்பதை க்காட்க்கொள்ளும் போக்கு, ஆன்மீக விஷயங்களை வசதியாக மறந்துவிடும் வழக்கம் ஆகியவை கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகக் கட்டமைப்பில் புரையோடிப்போயுள்ளதாக குறிப்பிட்டார்.
 
அதிகார பேராசை, தீவிரவாதம் போல வதந்திகளை பரப்புதல் உள்ளிட்ட 15 பாவங்கள் வாட்டிகனை ஆட்டிப்படைப்பதாகவும் போப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
எதிர்வரும் புத்தாண்டில் இந்தப் பாவங்கள் குறித்து அவர்கள் மனம் வருந்தி பிராயச்சித்தம் தேடுவார்கள் என்று தான் நம்புவதாகவும் போப் பிரான்சிஸ் தனது உரையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அவரது கடுமையான விமர்சனங்களை கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
 
முந்தைய போப்பாண்டவர்கள் பலரைப்போல வாட்டிகனின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் பிரான்சிஸ் பணியாற்றியவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.