1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (14:57 IST)

சுட்டவர்கள் இறந்தார்களா என்பதை சோதித்த கொலையாளி

அமெரிக்காவில் ஒரு பாலுறவுக்காரர்களுக்கான கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தன்னால் சுடப்பட்டவர்கள் இறந்து விட்டார்களா என்பதை உறுதிசெய்ய அவர்களிடம் எப்படி திரும்ப வந்தார் என்பதை விவரித்துள்ளார்.
 

 
இந்த தாக்குதலில் காயமடைந்து, ஓர்லாண்டோ மருத்துவனையில் இருக்கும் ஏஞ்சல் கோலன், தான் காலில் மூன்று முறை சுடப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
சுடப்பட்ட நிலையில் விழுந்து கிடக்கையில், தாக்குதலில் ஈடுபட்ட 29 வயது ஒமர் மடீன் தனது தலையில் சுடுவதற்கு குறிவைத்ததாகவும் ஆனால் அந்த குண்டு குறி தவறியது என்றும், பின்னர் தான் இறந்தவர் போல் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் மருத்துவனையில் உள்ள ஆறு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
 
ஒமர் மடீன் அவ்விடத்திற்கு அடிக்கடி வருகை புரிந்துள்ளார் என அக்கேளிக்கையகத்தின் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அக்கேளிக்கையகத்தின் வழக்கமான வாடிக்கையாளரான ஜிம் வான் ஹார்ன், பல்ஸ் இரவு கேளிக்கையகத்தில், 29 வயதுடைய ஒமர் மடீன் ஆண்களை அழைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது அவரை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.