1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 6 மே 2015 (19:42 IST)

சல்மான் கானுக்கு இடைக்கால பிணை கிடைத்தது

நடிகர் சல்மான் கானுக்கு இரண்டு நாட்கள் இடைக்கால பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
இதையடுத்து சல்மான் கான் இப்போதைக்கு சிறையில் தங்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை.
 
மும்பை அமர்வு நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று மதியம் தீர்ப்பளித்தாலும், தீர்ப்பு குறித்து முழுமையான ஆவணங்கள் தமக்கு அளிக்கப்படாத சூழலில், அவரை சிறையில் அடைப்பது தவறு என அவரது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உயர்நீதிமன்றத்தில் வாதாடினார்.
 
இதையடுத்து அவருக்கு இரண்டு நாள் இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக இன்று மதியம் 2002 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கியுள்ளது.