1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 16 அக்டோபர் 2014 (16:23 IST)

இமயமலையின் பனிப்புயலில் சிக்கியவர்கள் தேடப்படுகின்றனர்

நேபாளத்தின் மத்திய பகுதியில், பிரபலமான மலையேறும் பாதை ஒன்றில் கடுமையான பனிப்புயலும் பல பனிச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதை அடுத்து காணாமல்போயுள்ள குறைந்தது எழுபது பேரை மீட்புக் குழுக்கள் தேடி வருகின்றன.
தேடப்படுபவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளில் இருந்து வந்த மலையேறும் ஆர்வலர்கள் ஆவர்.
 
உலகெங்கிலும் இருந்தும் வருகின்ற மலையேற்றக்காரர்கள் அதிகமாகப் பயன்படுத்துகிற அன்னபூர்ணா மலையேற்றப் பாதைகளில் திடீரென பனிப்புயல் வீசியபோது இவர்கள் சிக்குண்டனர்.
 
குறைந்தது இருபது பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை தெரியவந்துள்ளது.
சென்றடையச் சிரமமான இந்த மலைப்பிரதேசத்த்தில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி உயிர்பிழைத்திருக்ககூடியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடிவருகின்றனர்.
 
தேடப்பட்டுவரும் நபர்கள் பற்றி தகவல் கேட்டு அவரின் உறவுக்காரர்கள் சமூக வலைத்தளங்களில் சோகத்துடன் எழுதியுள்ளனர்.