1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (19:09 IST)

நேபாள பூகம்பத்தில் ஏராளமானோர் பலி

நேபாள பூகம்பத்தில் ஏராளமானோர் பலியானதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


 
 
7.9 புள்ளிகள் அளவிலான இந்த பூகம்பம் தலைநகர் கட்மண்டுவுக்கும் பொக்கரா நகருக்கும் இடையில் தாக்கியுள்ளது.
 
பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதுடன், சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.


 
பூகம்பம் மையம் கொண்ட இடத்தை சுற்றவர உள்ள பகுதிகளில் அதீத அழிவு ஏற்பட்டுள்ளதாக பிபிசியிடம் கூறிய நேபாள தகவல் அமைச்சர், சர்வதேச உதவி நேபாளத்துக்கு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரபலமான தரஹரா கோபுரம் உட்பட கத்மண்டுவில் எண்ணிக்கையில்லா கட்டிடங்கள் நிர்மூலமாகியுள்ளன.
 
வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் பெரும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.