Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பனிப்பாறைகள் உருகுவது உணவுச் சங்கிலியை பாதிக்கும்

செவ்வாய், 5 மே 2015 (08:16 IST)

Widgets Magazine

ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஐஸ் பாறைகள் உருகி உடைவதன் காரணமாக, வட துருவம் ஒரு பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது என நார்வே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் குளிர்காலத்தில் ஆர்க்டிக் பெருங்கடலில் இவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

பனிப்பாறைகள் உருகுவது உணவுச் சங்கிலியை பாதிக்கும்

 
கணிசமான வெப்பம் ஆர்க்டிக் கடல்நீரில் நிலவுவதன் காரணமாக, பழமையான தடித்த ஐஸ்கட்டிகள் உடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மிகவும் மெல்லிய - புதிதாக உருவான ஐஸ் கட்டிகளே அந்த பகுதியில் தற்போது எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உயிரினப் பன்முகத் தன்மை பெருமளவு குறைவதற்கும், உருகிவரும் ஐஸ் பாறைகளே தூண்டுகோலாக இருக்கிறது என்றும், இதனால் உணவு சங்கிலியின் அடித்தளமாக செயல்படும் நுண்ணிய உயிரினங்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் நிலைமை உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 
வட துருவப் பிரதேசத்தில் பெட்ரொலிய எண்ணை அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சில நாடுகள் தற்போது முனைந்துள்ள சூழலில் விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.


Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
news

இலங்கை மத்திய வங்கித்தலைவர் பணிக்கு திரும்பியமைக்கு எதிர்ப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் விடுமுறையில் சென்றிருந்த இலங்கை மத்திய ...

news

அமெரிக்கா: "தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் தெரிந்தது"

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சமூகக் கூடம் ஒன்றில் முகமது நபியைப் பற்றி கேலிச் ...

news

நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்

நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ள நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகங்கள் ...

news

இலங்கை ஆட்சி மாற்றத்தை த.தே.கூ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

இலங்கையின் வட கிழக்கில் பொதுமக்களுடைய காணிகளில் நிலைகொண்டிருக்கின்ற இராணுவத்தினர் ...

Widgets Magazine Widgets Magazine