1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 30 ஆகஸ்ட் 2014 (02:08 IST)

பொய் கூறியதால் பட்டத்தைப் பறிகொடுத்த அழகி

ஆசிய பசிபிக் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஒருவர் தனது அழகிப் பட்டத்தை பறிகொடுத்துள்ளார்.

மரியாதையற்ற முறையிலும் நேர்மையற்ற முறையிலும் நடந்துகொண்டுள்ளதாக குற்றம் சாட்டியே அவரது அழகிப் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
 
அழகி கிரீடத்துடனும் அவருக்கு அளிக்கப்பட்ட மார்பக உள்ளீடுகளுடனும் (breast implants) அவர் காணாமல்போயிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
 
மியன்மாரிலிருந்து முதல் பெண்ணாக, 18 வயதான மே மியட் நோ கடந்த ஆண்டு அழகிப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தார்.
 
ஒரு லட்சம் டாலர்கள் பெறுமதியான கிரீடம் ஒன்றும் பத்தாயிரம் டாலர்கள் செலவில் மார்பக உள்ளீடுகளும் அவருக்கு வழங்கப்பட்டதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
 
பொய் கூறியதன் மூலம், அழகி ஒருவருக்கான ஆளுமையையும் நாணயத்தையும் அவர் இழந்துவிட்டதாக கடந்தவாரம் அவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் காணாமல்போய்விட்டதாக அழகிப் போட்டி ஏற்பாட்டுக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.