பொலிஸார் உடல்ரீதியில் துஷ்பிரயோகம் செய்தனர் : மலேசிய அரசியல்வாதி

பொலிஸார் உடல்ரீதியில் துஷ்பிரயோகம் செய்தனர் : மலேசிய அரசியல்வாதி
Last Modified ஞாயிறு, 3 மே 2015 (17:45 IST)
மலேசிய காவல்துறையினர் தன்னை உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அந்நாட்டின் முன்னணி எதிரணி அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.
 


மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர் சூவா தியான் சாங் சனிக்கிழமை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
 
இதன்போது, காவல்துறையினரால் தான் உடல்ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
மேதின வீதிப் போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
 
பெருமளவிலானோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியைத் தொடர்ந்து எதிரணி அரசியல்வாதிகள், முன்னணி செயற்பாட்டாளர்கள் உட்பட டஜன் கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :