வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 26 ஜனவரி 2015 (20:40 IST)

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் விஷமிகள் ஊடுருவல்

இணையதளத் தாக்குதல் நடத்துபவர்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் ஊடுருவி, அதன் இணையதள முகப்புப் பக்கத்தை மாற்றியமைத்துள்ளனர்.
இந்த விமான நிறுவன இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் தலையில் தொப்பி மற்றும் டக்ஸிடோ என்ற ஒருவகை கோட் அணிந்த ஒரு ஊறும் விலங்கின் படத்தை அவர்கள் பிரசுரித்துள்ளனர்.
 
இந்தப் படத்துக்கு "404-விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை" என்ற தலைப்பும் தரப்பட்டிருக்கிறது.
 
இந்தப் படத்துக்குக் கீழே "பல்லிக் குழுவால் ஊடுருவப்பட்டது -- அதிகார பூர்வ இணைய கேலிஃபேட்" என்ற செய்தியும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
 
சோனி ப்ளேஸ்டேஷன் வலையமைப்பின் மீது நடத்தப்பட்ட இணையத் தாக்குதலுக்கும் இந்த "பல்லிக் குழுவே" பொறுப்பேற்றுக்கொண்டிருந்தது.
 
மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஏன் இந்த இணையத் தாக்குதலுக்கு இலக்கானது என்று தெளிவாகவில்லை.
 
ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த ஆண்டு நடந்த இருபெரும் துயரச் சம்பவங்களிலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த சம்பவங்களில் ஒன்றில், அதன் விமானம் ஒன்று, 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காணாமல் போனது.