Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ருவாண்டாவில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சிங்கங்கள்

சனி, 27 ஜூன் 2015 (20:45 IST)

Widgets Magazine

ருவாண்டாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன சிங்கங்கள் முதல்தடவையாக நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக வனவிலங்குத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ருவாண்டாவில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சிங்கங்கள்

அங்கு 1994-ம் ஆண்டு நடந்த இனப்படுகொலைக்குப் பின்னர், சிங்கங்களும் ஒழிந்துபோயின.

இரண்டு ஆண் சிங்கங்களும் ஐந்து பெண் சிங்கங்களும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திங்களன்று விமானம் மூலம் கொண்டுவரப்படுகின்றன.

இந்த சிங்கங்கள் அக்காகேரா தேசிய வனப்பகுதிக்குள் விடப்படும்.

நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியின் முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக இந்த சிங்கங்கள் மீள்-அறிமுகத்தை அதிகாரிகள் வர்ணித்துள்ளனர்.

இனப்படுகொலைக்குப் பின்னர், இடம்பெயர்ந்த பெருமளவிலான மக்கள் இந்த வனப்பகுதிக்குள் குடியேறினர்.

இதனால், மக்கள் தங்களின் கால்நடைகளை பாதுகாப்பதற்காக சிங்கங்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர். அல்லது கொன்றுவிட்டனர்.


Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :  
news

திருமணம் செய்ய விரையும் ஒருபாலினத்தவர்

அமெரிக்காவில் வாழும் ஒருபாலினத்தவர் அனைவரும் நாட்டின் எந்த மாநிலத்திலும் திருமணம் ...

news

பாலியல் மின் புத்தகங்கள் வாங்க ஜெர்மனியில் புதிய நேரக்கட்டுப்பாடு

பாலியல் கிளர்ச்சியூட்டும் மின் புத்தகங்களை வாங்க விரும்பும் ஜெர்மனியர்கள், அந்நாட்டில் ...

news

தப்பிச்சென்ற கைதி ரிச்சர்ட் மெட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் சிறையொன்றிலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில் மூன்றுவாரங்களாக பிடிபடாது ...

news

இலங்கை நாடாளுமன்றத்தேர்தல்: ஜூலை ஆறாம் தேதி வேட்புமனு தாக்கல் துவக்கம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் ...

Widgets Magazine Widgets Magazine