வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (02:30 IST)

'சோம்பல்' மிகக் கெடுதி - உலக பொருளாதாரத்துக்கும் தான்!

தினமும் உடற்பயிற்சி செய்யாதவர்கள் உலகப் பொருளாதாரத்துக்கு ஆண்டொன்றுக்கு 67 பிலியன் டாலர்களுக்கும் மேல் செலவு வைக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
 

 
சோம்பியிருப்பது என்ற விஷயம் உலக அளவில் தொற்று நோய் போல பரவிக்கிடக்கும் இந்த நிலை, உலகுக்கு சுகாதாரச் செலவினங்களில் 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் 54 பிலியன் டாலர்களையும், இழந்த உற்பத்தித் திறனால் சுமார் 13 பிலியன் டாலர்கள் என்ற அளவுக்கு செலவு வைத்தது என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் மருத்துவ சஞ்சிகையான 'லேன்செட்'டில் பிரசுரமான ஒரு கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
ஓடியாடி சுறுசுறுப்பாக இல்லாமல், 'உட்கார்ந்தே' இருக்கும் வாழ்க்கை பாணிகளால், ஆண்டொன்றுக்கு சுமார் 5 மிலியன் இறப்புகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
 
தினமும் ஒரு மணி நேர சுறுசுறுப்பான உடற்பயிற்சி தேவை என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உடற்பயிற்சி நேரத்தை விட சுமார் மூன்று மடங்கு அதிகமானது.
 
சோம்பி இருப்பது என்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் பொருளாதாரச் சுமை, ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கே இருக்கிறது என்றும், மிக மேம்பட்ட சுகாதார அமைப்புகள் உள்ள செல்வந்த நாடுகள் இந்தப் பிரச்சனைக்கு அதிக விலை தரவேண்டியிருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.