வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (17:04 IST)

இலங்கை வந்துள்ளார் சீன அதிபர்

சீன அதிபர் சீ ஜின்பிங் இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ளார்.
 
இந்தப் பயணத்தின்போது இலங்கையுடன் இருபதுக்கும் மேற்பட்ட வர்த்தக மற்றும் கூட்டுறவு ஒப்பந்தங்களில் சீன அதிபர் கையொப்பமிடவுள்ளார்.
 
சீனாவின் நிதியில் உருவாக்கப்படுகின்ற துறைமுக நகரம் ஒன்றுக்கான பணிகளை துவங்கிவைப்பது என்பதும் இதில் அடங்கும். கொழும்பு அருகே கடல் பகுதியில் இருந்து நிலப்பரப்பை மீட்டு இந்த துறைமுகம் அமையும்.
 
யுத்தத்துக்கு பின்னரான இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக விளங்கிவருகின்ற சீனா, அங்கு நெடுஞ்சாலைகள், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு விமானம் நிலையம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது.
 
"முத்துச்சரம்" என்று வர்ணிக்கப்படுகின்ற இடங்களை இந்தியாவைச் சுற்றிலுமாக உருவாக்கி, பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க சீனா முயல்கிறது என்று தெரிவிக்கப்படும் கூற்றுக்களை சீனா மறுத்துவந்துள்ளது. இருந்தபோதிலும். இலங்கையை 'அற்புதமான ஒரு முத்து' என தான் பயணம் கிளம்பும் நேரத்தில் அதிபர் சீ வர்ணித்திருந்தார்.