வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (16:57 IST)

ஆப்கானிஸ்தானில் இராஜாங்க அலுவலகங்கள் அருகே குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருக்கும் வெளிநாட்டு இராஜாங்க அலுவலகங்கள் நிறைந்த பிரதேசத்தில் நடந்த பெரிய குண்டுவெடிப்பு அங்கிருந்த கட்டிடங்களை பெருமளவு ஆட்டம் காணச்செய்திருக்கிறது.
 

 
விமான நிலையத்துக்குச் செல்லும் சாலையில் சர்வதேச இராணுவ தளமும் அமெரிக்கத் தூதரகமும் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே இது நடந்ததாக நம்பப்படுகிறது. அந்த இடத்துக்கு அருகே பரபரப்புடன் இயங்கும் வணிக வளாகங்களும் இருக்கின்றன.
 
படைகளின் வாகனத்தொடரணி ஒன்றும் அந்த பிரதேசத்தில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிப்பதாகக் கூறும் செய்திகள், அவர்களை இலக்காக வைத்துக்கூட இது நடந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளன.
 
இதில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
 
முன்னதாக நகருக்குள் ஒரு குண்டு வெடித்ததில் இரண்டு குழந்தைகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
 
அது தவிர நாட்டின் தெற்கே ஹெல்மண்ட்டில் நடந்த தற்கொலைக் கார்குண்டு தாக்குதலில் குறைந்தது இரண்டு சிவிலியன்கள் கொல்லப்பட்டனர், நாற்பது பேர் காயமடைந்தனர்.