வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2015 (23:07 IST)

பழமைவாத யூதர்களால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு

இஸ்ரேலில் அதிகரித்து வரும் அதீத பழமைவாத யூதச் சமூகத்தினர் மற்றும் அரேபியர்களின் மக்கள் தொகை காரணமாக நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று என்று இஸ்ரேலிய மத்திய வங்கி தலைவர் கார்னிக் பிளக் எச்சரித்துள்ளார்.



வரக்கூடிய ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஒன்று இந்த நிலையில் ஏற்பட்டு இச்சமூகத்தினரில் பெரும்பான்மையினர் தொழிலுக்கு செல்லாமல் போனால் ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளோடு ஒப்பிடுகிறபோது இஸ்ரேல் அதிக அளவு பின்னடைவைக் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலத்திட்ட நிதியை பெற்றுக்கொள்ளும் அதீத பழமைவாத யூதர்கள் பெரும்பாலும் எந்த வேலையையும் செய்வதில்லை பதிலாக மதக் கல்வியிலேயே தமது முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள் என்றும் அரச அதரப்பு கூறுகிறது.

அதேவேளை இஸ்ரேலில் உள்ள அரேபியப் பிரஜைகள் யூதர்களோடு ஒப்பிடுகிறபோது தமக்கு குறைந்த வேலை வாய்ப்புகளே வழங்கப்படுவதாக முறையிடுகிறார்கள். இவ்விரு பிரிவினரும் இஸ்ரேலிய சனத்தொகையில் 30 சதவீதம் உள்ளனர்.