1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: புதன், 19 நவம்பர் 2014 (12:14 IST)

ஜெரூசலத்திலுள்ள யூத வழிபாட்டிடத்தில் தாக்குதல்

ஜெரூசலத்தில் கடந்த பல வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தாக்குதலாக கருத்தப்படும் ஒன்றில், யூத வழிபாட்டிடம் ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் இறைச்சி வெட்டும் கத்தி ஆகியவற்றுடன் நுழைந்த இரு பாலத்தீனர்கள், அங்கு வழிபாட்டாளர்கள் 4 பேரைக் கொன்றதுடன் மேலும் பலரைக் காயப்படுத்தியுள்ளனர்.


 
கொல்லப்பட்டவர்களில் மூவர் இஸ்ரேலிய அமெரிக்க இரட்டை குடியுரிமைகளை கொண்டவர்களாவர். அடுத்தவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இஸ்ரேலியராவார்.

தாக்குதலாளிகள் இருவரையும் காவல் துறையினர் சுட்டுக்கொன்றார்கள்.
 
இந்த வன்செயலை தூண்டியதாக பாலத்தீன தலைவர்கள் மீது குற்றஞ் சாட்டிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இதற்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று கூறியுள்ளார்.
 
சுயபாதுகாப்புக்காக அனுமதிப் பத்திரத்துடன் துப்பாக்கிகளை வைத்திருக்கும் இஸ்ரேலியர்கள் மீதான துப்பாக்கி கட்டுப்பாடுகளை தளர்த்தப்போவதாக அவரது அரசாங்கம் கூறியுள்ளது.
 
ஆனால், இஸ்ரேலிய பிரதமர்தான் பாலத்தீனர்களும் இஸ்ரேலியர்களும் உயிரிழக்க காரணமான இந்த வன்செயலை தூண்டினார் என்று மூத்த பாலத்தீனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.