1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (20:01 IST)

ஜப்பானிய பெண் ஒருவர் உளவு குற்றச்சாட்டில் சீனாவில் கைது

டோக்கியோவை சேர்ந்த பெண் ஒருவர் சீனாவில் உளவுபார்த்தார் என்ற சந்தேகத்தில் சீன அதிகாரிகளினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய செய்திகள் கூறுகின்றன.


 

 
வயது 50களில் இருக்கும் என்று நம்பப்படும் அந்தப் பெண் கடந்த ஜூன் மாதம் ஷங்காயில் கைதுசெய்யப்பட்டதாக பெயர் குறிப்பிடப்படாத தகவல்கள் கூறுகி்ன்றன. அடிக்கடி சீனாவிற்கு சென்றுவந்துள்ள அந்தப் பெண், டோக்கியோவில் உள்ள மொழிகள்-கற்கைநெறிகளுக்கான கல்லூரி ஒன்றில் தொழில்புரிந்துள்ளார்.
 
சீனாவில் உளவுபார்த்த குற்றச்சாட்டில் அண்மைய மாதங்களில் கைதுசெய்யப்பட்ட நான்காவது ஜப்பானியர் இந்தப் பெண் ஆவார். சீனாவின் தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
புதிய பாதுகாப்பு ஆணையம் ஒன்றை நிறுவியுள்ள சீனா, உளவுபார்த்தலை தடுக்கும் சட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.