வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 23 பிப்ரவரி 2015 (21:35 IST)

பிரிட்டிஷ் முன்னாள் அமைச்சர்கள் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு

தங்களின் பதவியை தவறாக பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள பிரிட்டன் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இரண்டு பேர், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.
இந்த இரண்டு நபர்களும் பணத்துக்காக தங்களின் அதிகாரத்தையும் தொடர்புகளையும் பயன்படுத்தி ஒரு கற்பனையான சீன நிறுவனத்துக்கு உதவுவது போன்ற காட்சி, இரகசிய நிருபர்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டது.
 
பிரிட்டனின் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் உறுப்பினரான ஜாக் ஸ்ட்ரா, தான் பலத்த கண்காணிப்புக்கு கீழ் வேலைப்பார்ப்பதாக கூறுவது போல அந்த காணொளியில் கேட்கிறது. அதேவேளை, உலகின் ஒவ்வொரு பிரிட்டிஷ் தூதரையும் அணுக தன்னால் உதவ முடியும் என்று கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான சர். மால்கம் ரிப்கிண்ட் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
‘டெய்லி டெலிகிராப்’ என்ற செய்தித்தாளும் ‘சேனல் 4’ என்ற தொலைக்காட்சி நிறுவனமும் கூட்டாக நடத்திய புலன் விசாரணையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜாக் ஸ்ட்ரா தானே தொழில் கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இருந்து தன்னைத் தானே இடைநிறுத்தியுள்ளார்.
 
சர். மால்கம் ரிப்கிண்டை அவரது கட்சி இடைநீக்கியுள்ளது.