வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2016 (15:10 IST)

விளம்பர விதிகளை மீறுகிறதா கூகுள்?

கூகுள் தனது நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தை சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி விதிகளை மீறுகிறதா என்று அந் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தனது விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.


 

 
கூகுளால் வழங்கப்படும் விளம்பரங்கள் போட்டியாளர்களை நஷ்டம் அடையச் செய்யும் வகையில் இணையத்தால் நியாயமற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அது குற்றம் சாட்டியுள்ளது.
 
இணைய வழி தேடலுக்கான விளைவுகளில் கூகுள் நிறுவனத்தின் சொந்த இணைய சேவைகள் வருவதாக கூறப்பட்ட தனது முந்தைய குற்றச் சாட்டுகளையும் வலுப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
 
தனது சந்தை ஆதிக்கத்தை மீறுவதான குற்றச் சாட்டில், கூகுள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்தி வருகிறது.
 
மேலும் வரும் வாரங்களில் இந்த புகார் குறித்து பதிலளிக்க போவதாக கூகுள் தெரிவித்துள்ளது.